Friday, May 20, 2011

சீதனத்து சந்தையில் விலை போகாதே.

மனிதா ஏன் நீயும் உன்

ஆண்மைக்கு விலை பேசுகிறாய்

ஒற்றைக் காலில் நிற்க இயலாத

உனக்கு எதற்கடா திருமணம்!

சீ! தனம் என்ற பெருங்கல்லை ஏன்?

அந்த அப்பாவி மாமா, மச்சான்...

என்ற பரம்பரையின் தலையில் போடுகிறாய்

சீதனம் எனும் பேரில் மார்க்கத்தை சீரழிக்காதே!

பாவம் அவர்கள் பாதம் தேயும் வரை

பாதையில் அழைந்து களைந்து விட்டார்கள்

உன்னைப் போல வீர ஆண்களுக்காக

வீடு, வாசல், வீதியில் செல்ல வாகனம்

என்றல்லவா நீ கேட்கின்றாய்!

கல் நெஞ்சம் கொண்ட கணவனா?

அல்லது காசு கேட்கும் கயவனா நீ?

உழைத்து வாழ முடியாத நீ எப்படி

உன் மனைவி மக்களுக்கு உழைத்துப் போடுவாய்

பெண் என்ற புதையல் வேண்டுமா

உனக்கு மஹர் என்ற மாணிக்கத்தைக் கொடு.

சீதனத்துக்கு அடிமையாகி விடாதே!

சீராய் சிந்தித்துப் பார்சோதனைக்குள்ளாகி விடாதே!

பணம் எனும் கூறிய ஆயுதத்தால் பிணமாகி விடாதே!

சிந்தித்துப் பார். வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்

பூமி அதிர்ந்து உன்னை உள் இழுத்தாலும்

மனிதா நிலையாய் நில்லடா

சீதனத்து சந்தையில் விலை போகாதே.

உன்னிடம் இருக்க வேண்டியது துணிவடா

மஹர் கொடுத்து மணப்பேன் மணப் பெண்ணை

மறை வழியில் நடத்துவேன் என் வாழ்வை

இன்ஷா அல்லாஹ்


வியாபாரிகளே கவனமாய் இருங்கள்

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன

பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு

அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற

எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி

ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்

வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்

பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை

சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு

பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்

ஆறேழு லட்சம் என்றால்....

சீதனம் கொடுக்கும் , வாங்கும்

அனைவரும் பச்சை விபச்சாரிகளே...

பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்

தந்தையை விட

ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற

வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.

தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது

உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்

நாளை உனக்கும் எயி்ட்ஸை விட

கொடிய நோய் வரலாம்...

கரும்புத் தோட்டத்தில் களவிலே

பிடிபட்டாலும் பரவாயில்லை

என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்

ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...

பார்த்தாயா சகோதரனே...

உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்

உன்னை விட வீதியில் செல்லும்

நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்